தரம் 8 சைவ நெறி வினாத்தாள் – அலகு 2 – ஆலய வழிபாடு

தரம் 8 சைவ நெறி வினாத்தாள்

அலகு 2 – ஆலய வழிபாடு-1

 1. இறைவன் ஆன்மாக்களுக்கு அருள்புரியும் இடம் எது?
 2. மக்கள் மன ஒருமைப்பாட்டுடன் கடவுளை வழிபடும் இடம் எது?
 3. ஆலயம் என்பதன் பொருள் யாது?
 4. ஆலயங்கள் ஏன் முக்கியம் பெறுகின்றன?
 5. ஆலயம் சென்று இறைவனை வழிபடுவதன் முக்கியத்துவம் எவ்வாறு விளக்கப்பட்டுள்ளது?
 6. ஆலய வழிபாட்டின் முக்கியத்துவத்தை கூறும் ஆற்றோர் கூற்று யாது?
 7. ஆலய அமைப்பு எத்தனை ஒத்ததாக காணப்படுகின்றது?
 8. மனித உடலமைப்புடன் ஆலய அமைப்பு காணப்படுவதனை எடுத்துக் காட்டுக?
 9. கோபுரம் எதனைக் குறிக்கின்றது?
 10. கோபுரத்தின் தளங்கள் எதனை குறிக்கின்றன?
 11. கோபுர சிற்பங்கள் எதனை குறிக்கின்றன?
 12. கோபுரத்தின் மாரு பெயர் யாது?
 13. கோபுரம் ஏதன் குறியீடாக விளங்குகின்றது?
 14. எம் மனதில் இறையுணர்வை மேலோங்க செய்வதாக அமைவது எது?
 15. கோபுர தரிசனத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் கூற்று எது?
 16. ஆலய சுற்றுப் பிரகாரங்களில் அமைந்துள்ள பரிவார தெய்வங்களை குறிப்பிடுக?
 17. ஆலயத்திற்கு எவ்வாறு செல்ல வேண்டும்?
 18. ஆலயத்திற்கு செல்லும் போது கொண்டு செல்லும் பூசை திரவியங்களை எழுதுக?
 19. ஆலயத்தினுள் செல்லமுன் யாது செய்தல் வேண்டும்?
 20. கோபுரத்தை கடந்து சென்றதும் யாது செய்தல் வேண்டும்?
 21. நந்தி தேவர் மூலவரை நோக்கி அமைந்திருப்பதன் காரணம் யாது?
 22. விநாயகரை எவ்வாறு வணங்க வேண்டும்?
 23. ஆண்கள் செய்யும் நமஸ்காரம் எது பெண்கள் செய்யும் நமஸ்காரம் எது?
 24. அட்டாங்க நமஸ்காரம் என்பது யாது?
 25. பஞ்சாங்க நமஸ்காரம் என்பது யாது?
 26. நமஸ்காரம் எத்திசையில் செல்ல வேண்டும்?
 27. நமஸ்காரம் எத்தனை தடவைகள் செய்ய வேண்டும்?
 28. நமஸ்காரம் செய்து எழுந்ததும் யாது செய்தல் வேண்டும்?
 29. ஆலயத்தில் செய்ய தகாத செயல்கள் எவை ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *