மின்சார கட்டணத்தை பூச்சியமாக மாற்ற முடியுமா?

மின்சார கட்டணத்தை பூச்சியமாக மாற்ற முடியுமா? உங்கள் மின்சார கட்டணத்தை பூச்சியம் ஆக்கலாம்!!!

இன்றைய கால கட்டத்தில் வீடுகளுக்கான மின்சார செலவு என்பது அதிகரித்து கொண்டே செல்கின்றது அதனை குறைப்பதற்கு பல விடயங்களை மேற்கொண்டும் ஏமாற்றம் மட்டுமே எஞ்சியுள்ளது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் மின்சார கட்டணத்தை முழுமையாக குறைக்க சூரிய மின்னாற்றல் (Solar Power) உதவுகிறது.

சூரிய மின்னாற்றல் என்றால் என்ன? அது எவ்வாறு மின் கட்டணத்தை குறைக்க உதவுகின்றது?
சூரிய மின்னாற்றல் என்பது சூரிய ஒளியில் இருந்து மின்னாற்றலைப் பெறுவதாகும். சூரிய ஒளிக்கதிர்களை Solar Panel உள்வாங்கி அவற்றை மின் சக்தியாக மாற்றுகின்றது. நவீனத் தொழில்நுட்பம் மூலம் ஒளிக்கதிர் மின்னழுத்தியில்(Solar Panel) உற்பத்தி செய்யப்படும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. அவை நூறு மெகா வாட் அளவுக்கு மேல் மின் உற்பத்தி செய்யும் திறன் உள்ளவை. இவை தற்போதைய காலத்தில் (2012) அளவுக்கு அதிகமான வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

பொதுவாக வீடுகளில் பயன்படுத்தப்படும் solar system 2 வகைப்படும்
1.On Grid
2.Off Grid

On Grid என்பது சோலார் மூலம் கிடைக்கும் மின்சாரத்தினை நேரடியாக பயன்படுத்துவது ஆகும் இதன் மூலம் இரவு நேரங்களில் அல்லது மழைக்காலங்களில் மின் சக்தியை பெற முடியாது

Off Grid எனப்படுவது பகல் வேளையில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் Battery களில் சேமிக்கப்பட்டு தேவையான நேரத்தில் பயன் படுத்தி கொள்ளலாம்.

வீடுகளுக்கு பொருத்துவதற்கு எந்த வகையான Solar சிஸ்டம் சிறந்தது?

இது உங்களின் வீட்டின் தேவைக்கு ஏற்ப மாறுபடும். நீங்கள் சோலார் சிஸ்டத்தினை வீட்டின் முழு தேவைக்கும் பயன்படுத்த நினைத்தால் On Grid Solar System சிறந்தது மாறாக மின்சாரம் தடைப்படும் போது மாத்திரம் பயன் படுத்த நினைத்தால் Off Grid சிறந்தது

காரணம் முழு வீட்டிற்கும் Off Grid மூலம் மின்சாரம் வழங்கும் போது On Grid உடன் ஒப்பிடும் போது ஆரம்பச்செலவு மற்றும் பராமரிப்பு செலவும் அதிகாமாக காணப்படும்

அப்படியானால் பகல் வேளையில் உற்பத்தி செய்யப்படும் மேலதிக மின்சாரத்தை என்ன செய்வது?

நாம் On Grid System பொருத்தும் பொழுது எமது மின் சேவை வழங்குனர்களால் Net Meter என்னும் சாதனத்தை பொருத்துவார்கள் இதனுடைய பிரதான பணி பகல் வேளையில் மேலதிகமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தினை எமது மின் சேவை வழங்குநர்க்கு அனுப்பும் (உதாரணம்:இலங்கை மின்சார சபை) அதாவது இந்த Net meter பின்புறமாக சுழலும் இரவு வேளைகளில் மின்சார சபை இடம் இருந்து பெற்று கொள்ளும். உதாரணமாக நீங்கள் 2Kw Solar System பொருத்தி உள்ளீர்கள் எனின் உங்களுடைய 1 மாத மின் உற்பத்தியானது 220 மின் அலகுகளாக காணப்படும் உங்கள் ஒரு மாத மின் பாவனை 230அலகு எனின் நீங்கள் 10 அலகிற்கு மட்டும் மின் கட்டணம் செலுத்த வேண்டும் உங்கள் 1 மாத மின் பாவனை 200 அலகுகளாக காணப்பட்டால் மேலதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட 20 அலகிற்கு மின்சார சபை உங்களுக்கு பணம் செலுத்தும்.

யார் எல்லாம் Solar System பொருத்தினால் லாபகரமாக இருக்கும்?

இதனுடைய ஆரம்ப செலவு அதிகமாக காணப்படுவதால் குறைந்த பட்சம் 1 மாத மின் கட்டணம் 5000/= ரூபாய்க்கு மேல் அறவிடப்படுபவர்கள் பொருத்தினால் லாபகரமாக இருக்கும்
காரணம் 1 மாத மின் கட்டணம் 5000/- ரூபாய் என்னும் போது மின் பாவனை 180 -200 அலகுகளாக காணப்படும் இதனை உற்பத்தி செய்வதற்கு 2Kw Solar Power System பொருத்த வேண்டும் அதற்கு இன்றைய நிலையில் சுமார் 350,000/- ரூபாய் தேவைப்படும். நாம் முதலிட்ட பணத்தினை பெற எமக்கு 6 வருடங்கள் தேவைப்படும். ஒரு Solar Power System இற்கு 10-25 வருடங்கள் வரை Warranty கொடுப்பதனால் 6 வருடத்திற்கு மேல் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் எமக்கு லாபமாக அமையும்.

இலங்கையில் உள்ள சில பிரபல்யமான Solar Power Providers

MicroPcSystem
Solaris
Jlanka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *